×

சமயபுர மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி, ஏப்.30: கிருஷ்ணகிரி பழையபேட்டை, நேதாஜி சாலையில் அமைந்துள்ள சமயபுர மாரியம்மன் கோயில் 19ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணிக்கு கொடி ஏற்றுதல், கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் ஆகியவை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (30ம் தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனை பாடல்கள் குருசாமி பொன்னுசாமி தலைமையில் நடக்க உள்ளது. நாளை (மே 1) காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மேல், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

The post சமயபுர மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Samayapura Mariamman Temple Festival ,Krishnagiri ,Samayapura Mariamman Temple ,Netaji Road, ,Krishnagiri Old Pettai ,Ganapati Homam ,Ganganam tying ,
× RELATED வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு